-0.1 C
New York
Sunday, December 28, 2025

துண்டிக்கப்பட்டது டிசினோவின் நகரம் – மீண்டும் கொட்டிய மழை.

தெற்கு டிசினோவில் உள்ள Valle di Muggio நகரம், கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவினால் வெளியுலகில் இருந்து துண்டிக்கப்பட்டுள்ளது.

மென்டிரிசியோ தீயணைப்புப் பிரிவினர்  இதனை உறுதி செய்தனர்.

கனெஜியோ கிராமத்திற்கு மேலே ஏற்பட்ட நிலச்சரிவு வீதியைத் துண்டித்துள்ளதுடன்,  பள்ளத்தாக்கை தனிமைப்படுத்தியுள்ளது.

சுவிட்சர்லாந்தில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை  பெய்த கனமழையால் மெண்டிரிசியோவை சுற்றியுள்ள பகுதிகள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளன.

அங்கு  24 மணி நேரத்தில் ஒரு சதுர மீட்டருக்கு 110 லிட்டர் மழை பெய்துள்ளது.

Valle di Muggio நகரத்திற்காக மழைக்கான எச்சரிக்கை ஞாயிறு மாலை 8 மணி வரை நடைமுறையில் இருக்கும். என அறிவிக்கப்பட்டிருந்தது.

அதேவேளை, மெண்டிரிசியோவில் கடந்த 24 மணிநேரத்தில் ஒரு சதுர மீட்டருக்கு 200 லிட்டர் மழை பெய்துள்ளதாக நேற்றிரவு அறிவிக்கப்பட்டுள்ளது.

மூலம் – Zueritoday

Related Articles

Latest Articles