பிரைபர்க் மாகாணத்தில் சனிக்கிழமை இரவு நடந்த கார் விபத்தில் 22 வயது ஓட்டுநர் ஒருவர் உயிரிழந்தார். சென்-ஆபின் மற்றும் க்ளெட்டரென்ஸ் சந்திப்புக்கு சற்று முன்பு, அவர் தனது வாகனத்தின் கட்டுப்பாட்டை இழந்தார்.
கார் சாலையை விட்டு விலகி ஒரு மரத்தில் மோதியது.
- Advertisement -

காயமடைந்த ஓட்டுநர் ஹெலிகொப்டர் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார், அங்கு அவர் உயிரிழந்ததாக பிரைபர்க் மாகாண காவல்துறை அறிவித்தது.
சேதமடைந்த வாகனம், இழுவை வாகனம் மூலம் எடுத்துச் செல்லப்பட்டு விசாரணைக்காக பறிமுதல் செய்யப்பட்டது.
மூலம்- bluewin


