கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கு, தாய்லாந்தின் தலைநகரான பாங்கொக்கை பெருமளவில் முடக்கியுள்ளது.
பெருநகர பாங்கொக் பகுதியின் அனைத்து 50 மாவட்டங்களும் பேரிடர் வலயங்களாக அறிவிக்கப்பட்டுள்ளதாக தாய் ஊடகங்கள் தெரிவிக்கின்றன. 48 மணி நேரத்திற்குள் சுமார் 30 சென்டிமீட்டர் மழை பெய்துள்ளது.

தலைநகரில் உள்ள கோயில்களையும் பள்ளிகளையும் அதிகாரிகள் அவசரகால தங்குமிடங்களாக மாற்றியுள்ளனர் என தாய் பிபிஎஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
நகரின் பல பகுதிகளில் போக்குவரத்து ஸ்தம்பித்துள்ளது. இன்று வரை மேலும் கனமழை எதிர்பார்க்கப்படுகிறது.
திங்கள் மற்றும் செவ்வாய் கிழமைகளில் பொதுத்துறை ஊழியர்கள் வீட்டிலிருந்து பணிபுரியுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர் என தாய் பிபிஎஸ் செய்தி வெளியிட்டுள்ளது. பள்ளிகளும் மூடப்பட்டிருக்கும் என காசோட் செய்தித்தாள் தெரிவித்துள்ளது.


