15.8 C
New York
Thursday, September 11, 2025

கல்வி மதிப்பீட்டில் உடல் எடையும் தாக்கம்- அதிர்ச்சியூட்டும் ஆய்வு.

பாலினம், உடல் எடை, இனம் மற்றும் சமூகப் பொருளாதார நிலை ஆகியன, இரண்டாம் நிலை கல்வி மதிப்பீட்டில் தாக்கம் செலுத்துவதாக பேர்ண் மற்றும் சூரிச் பல்கலைக்கழகங்களின் புதிய ஆய்வில், தெரியவந்திருக்கிறது.

செல்வந்தக் குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள் பொதுவாக சிறந்த தரங்களைப் பெறுகின்ற அதேவேளை, சிறுபான்மை இனத்தைச் சேர்ந்தவர்கள் பெரும்பாலான பாடங்களில் மோசமான தரங்களைப் பெற்றுள்ளனர்.

மாணவர்களுக்கு தரம் வழங்கப்படும் போது பாலினம், உடல் எடை, இனம் மற்றும் சமூகப் பொருளாதார நிலை என்பன குறித்த பாகுபாடுகள் காட்டப்படுவதாகவும் இந்த ஆய்வில் தெரியவந்திருக்கிறது.

2010 ஆம் ஆண்டில் ஒன்பதாம் வகுப்பில் படித்த சுமார் 14,000 மாணவர்களின் தர மாதிரிகளின் அடிப்படையில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

ஆசிரியர்களால் வழங்கப்பட்ட தரநிலைகள், தரப்படுத்தப்பட்ட திறன் தேர்வுகளின் முடிவுகளுடன் ஒப்பீடு செய்து ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது.

இரசாயனவியல் தவிர அனைத்து பாடங்களிலும் தரப்படுத்துவதில் பாலின வேறுபாடுகள் இருப்பதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

பெண் மாணவர்கள் ஜெர்மன், கணிதம் மற்றும் உயிரியல் ஆகிய பாடங்களில் நன்மையைப் பெற்றுள்ள அதே நேரத்தில் ஆண் மாணவர்கள் பௌதிகவியலில் சிறப்பான தர மதிப்பீட்டை பெற்றுள்ளனர் என்றும் இந்த ஆய்வில் தெரியவந்திருக்கிறது.

மூலம்- 20min

Related Articles

Latest Articles