26.5 C
New York
Thursday, September 11, 2025

உக்ரைன் அமைதி மாநாட்டில் துப்பாக்கிச் சூடு- மறைக்கப்பட்ட இரகசியம் வெளியே வந்தது.

பேர்கென்ஸ்டொக் நகரில், உக்ரைன் அமைதி மாநாட்டின் போது, துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் இடம்பெற்றது பல வாரங்கள் கழித்து வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

மாநாடு தொடங்குவதற்கு முதல்நாள், அமெரிக்க துணை ஜனாதிபதி கமலா ஹரிஸ், உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் ஜெலன்ஸ்கி உள்ளிட்டஉலகத் தலைவர்கள் பலர் சுவிசில் தங்கியிருந்த போது இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

மாநாடு நடந்த பகுதியில் பாதுகாப்புக்காக அமைக்கப்பட்டிருந்த இராணுவ முகாமில் துப்பாக்கி ஒன்று தவறுதலாக வெடித்துள்ளது. எனினும் எவருக்கும் காயம் ஏற்படவில்லை.

இந்தச் சம்பவத்தை பாதுகாப்பு தரப்பு உறுதிப்படுத்தியுள்ளது.

“சம்பந்தப்பட்ட அனைவரும் சங்கடமான சம்பவம் குறித்து அமைதியாக இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டனர்.

உக்ரைன் மாநாட்டின் போது, ​​இராணுவம் பாதுகாப்பு அல்லது படையினர் தங்கள் ஆயுதங்களை கட்டுப்பாட்டில் வைத்திருக்கவில்லை என்ற தோற்றத்தை கொடுக்க விரும்பவில்லை என்று, பாதுகாப்புத் தரப்பு தெரிவித்துள்ளது.

மூலம் – zueritoday

Related Articles

Latest Articles