21.6 C
New York
Friday, September 12, 2025

சூரிச்சை நிலைகுலைய வைத்த தொடர் தீவைப்புகள் – சூத்திரதாரியான பெண் கைது.

சூரிச்சை நிலைகுலைய வைத்த பல தீவைப்புச் சம்பவங்களுடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தில் 44 வயதுடைய சுவிஸ் பெண் ஒருவரை சூரின் கன்டோனல் பொலிசார் கைது செய்துள்ளனர்.

இந்த ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் அடுத்தடுத்து பல தீ விபத்துகள் ஏற்பட்டன.  தொடர் தீ வைப்புச் சம்பவங்கள்,  Elgg முழுவதையும் நிலைகுலையச் செய்தன.

இதுவரை அறியப்படாத குற்றவாளிகள் நகர மையத்திலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் உள்ள கட்டடங்களுக்கு தீ வைத்தனர் அல்லது தீ வைக்க முயன்றனர்.

இந்தச் சம்பவங்கள் குறித்து விசாரணையில் ஈடுபட்ட சூரிச் கன்டோனல் பொலிசார், ஞாயிற்றுக்கிழமை  சந்தேக நபர் ஒருவரைக் கைது செய்தனர்.

44 வயதான அந்த உள்ளூர் சுவிஸ் பெண்ணே  Elgg  மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் தீ வைப்புத் தாக்குதல்களைச் செய்திருக்கலாம் என்று பலமாக சந்தேகிக்கப்படுவதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.

மேலதிக விசாரணைகள் தொடர்கின்றன என்று பொலிசார் கூறுகின்றனர்.

பெரும்பாலும் குற்றத்தை ஒப்புக்கொண்ட பெண்ணுக்கு எதிராக குற்றவியல் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், விசாரணைக்கு முந்தைய தடுப்புக்காவல் கோரப்பட்டுள்ளதாக சட்டமா அதிபர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

 மூலம் – zueritoday

Related Articles

Latest Articles