26.3 C
New York
Sunday, June 22, 2025

பிராந்திய, மாவட்ட பொலிஸ் நிலையங்களை மூடுகிறது சூரிச் நகர பொலிஸ்.

சூரிச் நகர பொலிஸ், பிராந்திய மற்றும் மாவட்ட பொலிஸ் நிலையங்களை மூடவுள்ளதாக அறிவித்துள்ளது.

13 பொலிஸ் நிலையங்களுக்குப் பதிலாக, மூன்று தளங்கள், Langstrasse ஒரு இடம் மற்றும் ஒரு முக்கிய இடத்தில் மாத்திரம் அமைந்திருக்கும்.

பிராந்திய பொலிஸ் நிலையங்கள் அவற்றின் முக்கியத்துவத்தை இழந்து விட்டதாக சூரிச் நகர பொலிஸ் அறிவித்துள்ளது.

முறைப்பாடுகளை இப்போது இணையத்தளத்திலும் மேற்கொள்ளலாம்.

குற்றப் புலனாய்வுத்துறைக்கு அருகில் Förrlibuckstrasse இல் ஒரு முக்கிய இடம் இருக்கும்.

நகர பிராந்திய பொலிஸ் நிலையம் (யுரேனியா), Altstetten இல் உள்ள Albis தளம் மற்றும்  Oerlikonஇல்  உள்ள Airgate ஆகியவற்றில் மூன்று தளங்கள் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளன.

அத்துடன் Langstrasse இல் ஒரு இடத்தில் பொலிஸ் தளம் இயங்கும்.

இதன் மூலம் செயற்திறன் அதிகரிக்கும் என்று சூரிச் நகர பொலிஸ் நம்புகிறது.

பொலிஸ் அதிகாரிகள் தேவைப்படும் வீதிகளில் அடிக்கடி பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள்.

செப்ரெம்பர் மாத தொடக்கத்தில், மாவட்டம் 5 இல் உள்ள பிராந்திய பொலிஸ் நிலையம், மாவட்டம் 4 இல் உள்ள பொலிஸ் நிலையத்துடன் ஒருங்கிணைக்கப்படும்.

Unterstras, Affoltern மற்றும் Schwamendingen ஆகிய இடங்களில் உள்ள பொலிஸ் நிலையங்கள் 2025 முதல் Oerlikon உடன் ஒருங்கிணைக்கப்படும்.

மூலம்- zueritoday

Related Articles

Latest Articles