27.6 C
New York
Thursday, August 13, 2026

மழையுடன் கொட்டிய பாரிய ஆலங்கட்டிகள்.

சுவிற்சர்லாந்தின் பல பகுதிகளில் நேற்று கடும் புயற்காற்றுடன் மழை பெய்துள்ளது.

பல இடங்களில் ஆலங்கட்டி மழையினால் சேதங்கள் ஏற்பட்டுள்ளன.

துர்கோ கன்டோனில்  Weinfelden பகுதியில் வழக்கத்துக்கு மாறாக பெரியளவிலான ஆலங்கட்டிகள் மழை போலக் கொட்டின.

பனிக்கட்டிகள் மிகப் பெரியதாகவும், வெவ்வேறு வடிவங்களிலும் காணப்பட்டன.

இதனால் வீடுகளின் கூரைகள், வாகனங்கள் உள்ளிட்டவற்றுக்கு சேதங்கள் ஏற்பட்டுள்ளன.

அதேவேளை கடுமையான புயற்காற்றினால் மரங்களும் முறிந்து விழுந்தன.

சூரிச்சில் பாடசாலை ஒன்றின் விளையாட்டு மைதானத்தில் இருந்த மரம் முறிந்து விழுந்ததில் அதன் கீழ் நிறுத்தப்படடிருந்த இரண்டு கார்களும், அருகில் இருந்த வீடு ஒன்றும் சேதம் அடைந்துள்ளன.

அதேவேளை, Graubünden கன்டோனில் இடியுடன் கூடிய மழையினால் நேற்றிரவு இரண்டு நகராட்சிகளில் மின்சாரம் தடைப்பட்டது.

இதனால் நூற்றுக்கணக்கான வீடுகள் இருளில் மூழ்கின.

நேற்றுமாலை தொடங்கிய இந்த புயலுடன் கூடிய மழை இன்றும் தொடரும் என வானிலை முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மூலம்- 20min

Related Articles

Latest Articles