18 C
New York
Friday, September 12, 2025

புயல்களால் சுவிசில் 200 மில்லியன் பிராங்குகள் இழப்பு.

ஜூன் மாத நடுப்பகுதியில் இருந்து ஜூலை மாத  தொடக்கம் வரையான காலப்பகுதியில்,  ஏற்பட்ட புயல்களால், சுவிட்சர்லாந்தில் 160 முதல் 200 மில்லியன் சுவிஸ் பிராங்குகள் வரை  காப்புறுதி இழப்பு  ஏற்பட்டுள்ளது.

சுவிஸ் காப்புறுதிச் சங்கம் நேற்று இதனை அறிவித்துள்ளது.

இந்தசேதங்கள் அனைத்தும்,  சட்டப்பூர்வ இயற்கை ஆபத்துக் காப்புறுதியினால் ஈடுசெய்யப்படுகிறது.

கடந்த சில வாரங்களாக வீசிய புயல்களால், Valais மற்றும் Ticino மாகாணங்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், சுவிஸ் காப்புறுதிச் சங்கம் மேலும் கூறியுள்ளது.

மூலம்- swissinfo

Related Articles

Latest Articles