23.5 C
New York
Monday, July 14, 2025

சென். கல்லனில் நேற்றிரவு வன்முறை – 4 பேர் காயம்.

St. Gallen கன்டோனில் நேற்றிரவு இடம்பெற்ற வன்முறைச் சம்பவம் ஒன்றில் 4 பேர் காயமடைந்துள்ளனர்.

நேற்று இரவு 9:30 மணியளவில், Hochwachtstrasse இல் ஒரு மோதல்  நடந்ததாக பொலிசாருக்கு அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து,  மீட்புப் பணியாளர்கள் நான்கு பேரைக் காயங்களுடன் கண்டுபிடித்தனர். அவர்களில் சிலர் பலத்த காயமடைந்திருந்தனர்.

இதையடுத்து, சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இனி பொதுமக்களுக்கு எந்த ஆபத்தும் இல்லை என பொலிசார் அறிவித்துள்ளனர்.

எனினும்,  வன்முறைச் சம்பவத்தின் பின்னணி மற்றும் என்ன நடந்தது என்று இன்னமும் தெளிவாகத் தெரியவில்லை.

சம்பவ இடத்தில் ஏராளமான மீட்புப் பணியாளர்கள், பொலிசார் மற்றும் தீயணைப்புப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

இன்று காலை St. Gallen பொலிசார் மேலதிக தகவல்களை வழங்குவார்கள்.

மூலம்- 20min

Related Articles

Latest Articles