28.4 C
New York
Thursday, August 13, 2026

டாக்சி மீது மோதியது பொலிஸ் கார் – 2 பேர் காயம்.

சூரிச்சில் உள்ள Hardbrücke இல் பொலிஸ் ரோந்து கார், வாடகை கார்  மீது மோதிய விபத்துக்குள்ளானது.

இன்று அதிகாலை, 5  மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றது.

சூரிச் பொலிஸ் ரோந்துக் கார்  குடும்ப வன்முறை சம்பந்தப்பட்ட அவசர சம்பவம் குறித்து விசாரிக்கச் சென்று கொண்டிருந்த போதே இந்த விபத்து ஏற்பட்டது.

இந்த விபத்தில் வாடகை கார் பயணிகள் இரண்டு பேர், சிறிய மற்றும் மிதமான காயங்களுக்கு உள்ளாகினர்.

காயமடைந்தவர்களும், வாடகை கார் சாரதியும், முன்னெச்சரிக்கையாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இரண்டு வாகன ங்களும் பெரும் சேதம் அடைந்தன.

மூலம் – 20min

Related Articles

Latest Articles