-3.3 C
New York
Sunday, December 28, 2025

நீர் நிலைகளில் மிதந்த மூன்று சடலங்கள் மீட்பு.

சுவிசில், நீர் நிலைகளில் இருந்து மூன்று பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

சூரிச்சில், சனிக்கிழமை மாலை நீச்சல் பயிற்சியில் ஈடுபட்டிருந்த 15 வயது சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழந்தார்.

அதேவேளை, Zug ஏரியில் இரண்டு பேரின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களின் மரணத்திற்கான காரணம் இன்னும் தெரியவில்லை.

நேற்று பிற்பகல் Zug கன்டோனல் பொலிஸ் வெளியிட்ட தகவலின் படி, சனிக்கிழமை பிற்பகல் கரையிலிருந்து சில மீட்டர் தொலைவில் Aegeri ஏரியில் ஒருவரின் உடல் கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து சடலம் கரைக்கு கொண்டு வரப்பட்டது.

மூலம்- Theswisstimes

Related Articles

Latest Articles