18 C
New York
Friday, September 12, 2025

மலையில் இருந்து தவறி விழுந்து ஒருவர் பலி- 17 பேர் மீட்பு.

Lavertezzo பகுதியில் உள்ள மலையில் நேற்று மதியம் 12.30 மணியளவில், இடம்பெற்ற பெரிய விபத்தொன்றில்,  ஒருவர் உயிரிழந்தார் என டிசினோ கன்டோனல் பொலிசார் தெரிவித்தனர்.

Bellinzona பகுதியைச் சேர்ந்த 60 வயதான சுவிஸ் நபர் ஒருவர் Alta della Verzasca வழியாக மக்கள் குழுவுடன் பயணித்தபோதே  விபத்தில் உயிரிழந்தார்.

அவர் சுமார் 100 மீட்டர் உயரத்தில் இருந்து விழுந்ததில் பலியானார்.

கடல் மட்டத்திலிருந்து சுமார் 2400 மீட்டர் உயரத்தில் இந்த விபத்து இடம்பெற்றது.

உயிரிழந்தவரின்  உடல் மீட்கப்பட்டுள்ள அதேவேளை,  மலையேற்றக் குழுவைச் சேர்ந்த 17 பேர் ஹெலிகொப்டர் மூலம் வெளியேற்றப்பட்டனர்.

மூலம் –  20min

Related Articles

Latest Articles