Solothurn கன்டோனல் பொலிசார், Oberbuchsiten இல் மூன்று சந்தேகத்திற்கிடமான திருடர்கள் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 17, 28 மற்றும் 21 வயதுடையவர்கள் என்றும். மொரோக்கோவைச் சேர்ந்தவர்கள் என்றும் பொலிசார் தெரிவித்தனர்.
Bahnhofstrasse இல் உள்ள ஒரு வீட்டிற்குள் அந்நியர்கள் சட்டவிரோதமாக நுழைந்துள்ளதாக நேற்றுக் காலை 6.45 மணியளவில், ஒரு பெண் எச்சரிக்கை மையத்திற்கு புகார் அளித்திருந்தார்.
இதையடுத்து, ரோந்துப் படையினர் நியமிக்கப்பட்டு ஆட்கள் இல்லாத கட்டடம் ஒன்றில் இருந்த மூவரையும் பொலிசார் கைது செய்தனர்.
மூலம் – Bluewin