-3.3 C
New York
Sunday, December 28, 2025

சூடானில் அமைதியை ஏற்படுத்த சுவிசில் பேச்சுவார்த்தை.

சூடானில் அமைதியை ஏற்படுத்துவதற்கான பேச்சு சுவிற்சர்லாந்தில் அடுத்தமாதம் நடைபெறவுள்ளது. அமெரிக்கா நேற்று  மாலை இதனை அறிவித்துள்ளது.

இதன்படி, சூடான் இராணுவமும், அதற்கு எதிராக போராடி வரும்,  FSR எனப்படும் படையினரும், ஓகஸ்ட் நடுப்பகுதியில் சுவிட்சர்லாந்தில் அமைதிப் பேச்சில் ஈடுபடவுள்ளனர்.

மோதலை முடிவுக்குக் கொண்டு வருவதே இந்தப் பேச்சுவார்த்தையின் நோக்கம் என்று அமெரிக்க இராஜாங்க செயலர் அன்டனி பிளிங்கன் அறிக்கை ஒன்றில் கூறியுள்ளார்.

ஓகஸ்ட் 14 ஆம் திகதி சுவிட்சர்லாந்தில் அமெரிக்க மத்தியஸ்தத்துடன், தொடங்கும் போர்நிறுத்த பேச்சுவார்த்தையில் பங்கேற்குமாறு சூடான் ஆயுதப் படைகள் (SAF) மற்றும் விரைவு ஆதரவுப் படைகளை (FSR) அமெரிக்கா அழைத்துள்ளது என்றும் அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இது குறித்து சுவிற்சர்லாந்து அரசாங்கம் தகவல் எதனையும் வெளியிடவில்லை.

மூலம் – Theswisstimes

Related Articles

Latest Articles