21.6 C
New York
Friday, September 12, 2025

கஞ்சா கடத்தி வந்த அமெரிக்க பெண்கள் – சூரிச்சில் சிக்கினர்.

சூரிச் விமான நிலையத்தில் 70 கிலோ கஞ்சாவை கடத்தி வந்த இரண்டு பெண்களை கைது செய்திருப்பதாக சூரிச் கன்டோனல் பொலிசார் தெரிவித்தனர்.

சந்தேகத்திற்குரிய இருவரும் அமெரிக்கர்கள் என்றும், அவர்கள் குறிப்பிட்டனர்.

ஞாயிற்றுக்கிழமை பாங்கொக்கில் இருந்து சூரிச் வந்த 26 வயதுடைய பெண்ணின் பொதியை பொலிஸ் அதிகாரிகள் சோதனையிட்ட போது, 35 கிலோ கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இரண்டாவது சந்தேக நபர் 22 வயதுடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர் திங்கட்கிழமை டோஹாவிலிருந்து சூரிச்சிற்கு விமானம் மூலம் வந்தார் என்றும்,  அவரது பொதிகளில் மேலும் 35 கிலோ கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டதாகவும் சூரிச் பொலிசார் தெரிவித்தனர்.

இரு பெண்களும் கைது செய்யப்பட்டதுடன், கஞ்சாவும் பறிமுதல் செய்யப்பட்டது.

மூலம் – Bluewin

Related Articles

Latest Articles