18 C
New York
Friday, September 12, 2025

ஐந்தாவது முறையாகவும் வோர்ப் நகர மேயராகிறார் ஜிஃபெல்லர்

பேர்ன் கன்டோனில் உள்ள Worb நகரின் தற்போதைய மேயரான Niklaus Gfeller  (EVP), மற்றொரு பதவிக் காலத்துக்கு போட்டியின்றித் தெரிவு செய்யப்படவுள்ளார்.

செப்ரெம்பர் 22ம் திகதி நடைபெறவுள்ள நகராட்சித் தேர்தலில் போட்டியிடுவதற்கு வேட்பாளர்கள் யாரும் பதிவு செய்யவில்லை.

எனவே Niklaus Gfeller  போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டதாக நகர சபை அறிவிக்கும் என, நகரசபை எழுத்தர் அலுவலகம் நேற்று அறிவித்தது.

EVP கட்சியைச் சேர்ந்த இவர்,  2009 ஆம் ஆண்டு  முதல் இந்தப் பதவியில் இருந்து வருகிறார்.

அவர் இப்போது  ஐந்தாவது பதவிக்காலத்தை பெறவுள்ளார்.

மூலம் – Bluewin

Related Articles

Latest Articles