-0.7 C
New York
Sunday, December 28, 2025

சுரங்கப் பாதையில் தீக்கிரையான ட்ரக்.

Seelisberg சுரங்கப் பாதையில் நேற்றுக்காலை ட்ரக் ஒன்று தீப்பற்றி எரிந்து நாசமாகியது.

இந்தச் சம்பவத்தில் எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், Uri மற்றும்  Nidwalden கன்டோன்களுக்கு இடையிலான இரண்டு பக்க போக்குவரத்துகளும் தற்காலிகமாக மூடப்பட்டன.

டச்சு உரிமத் தகடுகளுடன் கூடிய அந்த ட்ரக்,  வடக்கு நோக்கி பயணித்ததாக Uri அதிகாரிகள் தெரிவித்தனர்.

சுரங்கப்பாதை நுழைவாயிலில் இருந்து மூன்று கிலோமீட்டர் தொலைவில் வாகனத்தில் தீப்பிடித்தது.

தீயணைப்பு துறையினர் விரைந்து சென்று  தீயை அணைத்தனர்.

இருப்பினும், தீயினால் கணிசமான பொருள் சேதம் ஏற்பட்டுள்ளதாகவும், தீ விபத்துக்கு  தொழில்நுட்பம் கோளாறே காரணம் என்றும் முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related Articles

Latest Articles