உலகின் மிகப்பெரிய சுவிஸ் கொடி Säntis mountain இல் ஜூலை 31-ம் திகதி ஏற்றப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
6400 சதுர மீற்றர் பரப்பளவையும், 700 கிலோ எடையையும் கொண்டதாக இந்த கொடி வடிவமைக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு ஏற்றத் திட்டமிடப்பட்ட இந்தக் கொடி, சீரற்ற வானிலை மற்றும் பலத்த காற்று காரணமாக ஏற்றப்படவில்லை.
ஜூலை 31 காலை 10.30 மணிக்கு இந்த மாபெரும் கொடியை ஏற்ற முடியும் என்று ஏற்பாட்டாளர்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.
ஓகஸ்ட் 1 தேசிய விடுமுறை தினத்தை முன்னிட்டு இந்தக் கொடி ஏற்றப்படுகிறது.
மூலம் – Swissinfo