-0.2 C
New York
Tuesday, December 30, 2025

சுவிஸ் பேர்ன்னில் மாவீரன் அமரர் தம்பிப்பிள்ளை மகேஸ்வரன் அவர்களின் நினைவுவணக்க நிகழ்வு

சுவிஸ் பேர்ன் ஞானாம்பிகை சமேதஞானலிங்கேஸ்வரப்பெருமான் ஆலய மண்டபத்தில் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியத்தால் ஏற்பாடு செய்யப்பட்டு நடைபெற்ற மாவீரன் அமரர் தம்பிப்பிள்ளை மகேஸ்வரன் அவர்களின் நினைவுவணக்க நிகழ்வு மிகச்சிறப்பாக நடைபெற்றது! பாடசாலை கோடைக்கால விடுமுறையால் மக்கள் குறிப்பிட்ட அளவில் .. கலந்துகொண்டபோதும் கனதியான நிகழ்வாக நடைபெற்றது!

முதலில் ஆரம்ப அறிமுக உரையோடு தொடங்கப்பட்ட நிகழ்வில் புங்குடுதீவின் முக்கிய பிரமுகர்கள் நினைவுச்சுடர் விளக்கை ஏற்றிவைக்க
தொடர்ந்து நிகழ்வில் கலந்துகொண்ட அனைவரும் மலரஞ்சலியும் , மெழுகுவர்த்திகளை ஏந்தி தியாக உணர்வை வெளிப்படுத்துமுகமாக அவருக்கான மரியாதையை செய்தனர் .

அதனைத்தொடர்ந்து அமைதிவணக்கம் , தமிழ்த்தாய்வாழ்த்து , எனத்தொடர்ந்த நிகழ்வானது
திருமதி டர்ஷிக்கா கிருஸ்ணானந்தம் வடிவேலு அவர்களின் வரவேற்புரையைத்தொடர்ந்து செல்வரட்ணம் சுரேஷ் ஆரம்ப புகழ் அஞ்சலி நிகழ்வைத் தொடர்ந்து கலாநிதி கல்லாறுசதீஸ் அவர்களின் அழகான பதிவோடு புகழ்அஞ்சலி பதிவாக தொடர்ந்து திரு சிவானந்தன் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியச் செயலாளர் அவர்களின் சிறப்பு செவ்வியுடன் நகர்ந்தது நிகழ்வு !

தீவகன்

Related Articles

Latest Articles