Uri கன்டோனில் உள்ள Rütli meadow இல் ஓகஸ்ட் 1 ஆம் திகதி நடைபெறும் கொண்டாட்டங்களில் இந்த ஆண்டு சுவிஸ் சமஷ்டி பேரவையின் எந்த உறுப்பினரும் உரை நிகழ்த்தமாட்டார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பாரம்பரியமாக, சுவிஸ் சமஷ்டி பேரவையின் உறுப்பினர் ஒருவர் ஓகஸ்ட் 1 ஆம் திகதி கொண்டாட்டத்தின் போது Rütli meadow இல் உரையாற்றுவது வழக்கம்.
இந்த முறை சுவிஸ் மக்கள் கட்சி மற்றும் தீவிர லிபரல் கட்சி உறுப்பினர்கள் மிகவும் தாமதமாக கேட்கப்பட்டதால் அல்லது நேரமின்மையால் இந்த நிகழ்வில் கலந்து கொள்ளவில்லை.
சுவிஸ் மக்கள் கட்சியைச் சேர்ந்த Albert Rösti, ஏழு நிகழ்வுகளில் பங்கேற்கும், கால அட்டவணையைக் கொண்டுள்ளார்
லிபரல் கட்சியைச் சேர்ந்த Karin Keller-Sutter நியூயோர்க்கில் உள்ள சுவிஸ் நாட்டவர்கள் மத்தியில் உரையாற்றவுள்ளார்.
சுவிஸ் மக்கள் கட்சியைச் சேர்ந்த Guy Parmelin, இந்த நிகழ்வுக்காக அழைப்பைப் பெறவில்லை என்றாலும், முழு நாளும் அவர் வேறு நிகழ்வுகளுக்கு இணங்கியுள்ளார்.
Rütli meadow வை மேற்பார்வையிடும் பொது நலனுக்கான சுவிஸ் சமூகம், இந்த ஆண்டு சமஷ்டி பேரவை உறுப்பினர் பங்கேற்காதது பற்றி கவலைப்படவில்லை.
மூலம்- Swissinfo