தென்கிழக்கு பிரான்சில் மோசமான வானிலை காரணமாக பாரிஸுக்கு பயணம் செய்வதைத் தவிர்க்குமாறு SBB அறிவுறுத்தியுள்ளது.
லொசான், ஜெனிவா மற்றும் பாரிஸ் இடையிலான, TGV அதிவேக ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
சூரிச் மற்றும் Basel இல் இருந்து வரும் TGV ரயில்கள் பிற்பகலில் இருந்து திருப்பி விடப்பட்டுள்ளன.
புதன்கிழமைக்கான பயணச்சீட்டுகளை SBB மாற்றும் அல்லது பணத்தைத் திரும்பக் கொடுக்கும்.
பிரான்சில் Paris Gare de Lyon மற்றும் Dijon மற்றும் Mâcon-Loché இடையேயான ரயில் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது என்று SBB இன்று அறிவித்தது.
ரயில் ரத்துக்கு மேலதிகமாக, தாமதம் மற்றும் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்படுதல் போன்ற சூழ்நிலைகளும் எதிர்பார்க்கப்படுகிறது.
மூலம் – zueritoday

