6.8 C
New York
Monday, December 29, 2025

பிரேக் என அக்சிலரேட்டரை அமுக்கிய கார் ஓட்டுநர்.

Glarus  கன்டோனில், பெண் ஓட்டுநர் ஒருவர் பிரேக் என நினைத்து அக்சிலரேட்டரை அமுக்கியதால், கார் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாகியது.

28 வயதுடைய பெண் ஓட்டுநர் ஒருவர் Niederurnen நுழைவாயில் இருந்து சூரிச் திசையில் A3 நெடுஞ்சாலையில் தனது கரை ஓட்டிச் சென்றார்.

மணிக்கு 115 கிமீ வேகத்தில் சென்று கொண்டிருந்த கார் மற்றொரு வாகனத்தை முந்தினார்.

கனமழை காரணமாக, அவர் உடனடியாக மீண்டும் வேகத்தைக் குறைக்க முயன்றார்.

ஆனால் அவர், பிரேக்கிற்குப் பதிலாக அக்சிலரேட்டர் மிதியை அழுத்தியதால், ஓட்டுநரின கட்டுப்பாட்டை இழந்த கார், முதலில் வலது புறத் தடுப்பிலும் பின்னர் மத்திய தடுப்பிலும் மோதி, இறுதியாக பாதையில் முழுமையாக நிறுத்தப்பட்டது.

ஓட்டுநர் மற்றும் அவருடன் பயணித்த அவரது இரண்டு வயது மகன் ஆகியோர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

விபத்து சம்பவத்தை தொடர்ந்து A3 நெடுஞ்சாலையில் போக்குவரத்து இடையூறு ஏற்பட்டது.

மூலம் – Zueritoday

Related Articles

Latest Articles