-0.9 C
New York
Saturday, February 14, 2026

இஸ்ரேலுக்கான விமானங்களையும் இடைநிறுத்தியது சுவிஸ்.

சூரிச்சிலிருந்து இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ்வுக்கான விமான சேவையை சுவிஸ் விமான நிறுவனம் நேற்று முதல் இடைநிறுத்தியுள்ளது.

சூரிச் -பெய்ரூட் இடையிலான,  விமான சேவை இடைநிறுத்தம் நீடிக்கின்ற நிலையில் சுவிஸ் விமான நிறுவனம் இந்த முடிவை எடுத்துள்ளது.

மத்திய கிழக்கின் அண்மைய பதற்ற நிலையைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஓகஸ்ட் 8ஆம் திகதி வியாழக்கிழமை வரை சுவிஸ் விமானம், டெல் அவிவுக்கு பறக்காது என்று அந்த விமான நிறுவனம் அறிவித்துள்ளது.

பயணிகள் மற்றும் பணியாளர்களின் பாதுகாப்பு எப்போதும் எங்கள் முன்னுரிமை என்றும் சுவிஸ் விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.

பாதிக்கப்பட்ட பயணிகள் பின்னர் விமானத்தை மீண்டும் முன்பதிவு செய்யலாம் அல்லது தங்கள் கட்டணத்தை முழுவதுமாகத் திரும்பப் பெறலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

சுவிஸ் தனது ஊழியர்களை இஸ்ரேலை விட்டு நாட்டை விட்டு வெளியேறுவதற்கான வாய்ப்பையும் வழங்கியுள்ளது.

அதேவேளை கடந்த திங்கட்கிழமை முதல் இடைநிறுத்தப்பட்டுள்ள பெய்ரூட்டுக்கான விமான சேவை இடைநிறுத்தம் ஓகஸ்ட் 12ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மூலம் – Zueritoday

Related Articles

Latest Articles