11.9 C
New York
Saturday, April 11, 2026

தீப்பற்றிய வணிக, குடியிருப்பு வளாகம்- ரயில்கள் 3 மணிநேரம் தடை.

Glarus கன்டோனில் உள்ள Mühlehorn இல் உள்ள குடியிருப்பு மற்றும் வணிக கட்டட வளாகத்தில் நேற்றிரவு பாரிய தீ விபத்து ஏற்பட்டது.

ரயில் நிலையத்துக்கு அருகில் இருந்த இந்த கட்டடத்தில் இரவு 10. 30 மணியளவில் ஏற்பட்ட தீ மளமளவென மேல் தளங்களுக்கும் பரவியது.

Glarus Nord, Weesen மற்றும் SBB இன் தீயணைப்பு பிரிவினர் கூட்டாக இணைந்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இந்த தீவிபத்தினால் யாருக்கும் காயங்கள் ஏற்படவில்லை. 2 பேர் அவர்களின் வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.

ரயில் பாதைக்கு அருகில் தீவிபத்து ஏற்பட்டதால், மூன்று மணி நேரம் ரயில் போக்குவரத்து தடைப்பட்டது.

இலட்சக்கணக்கான யூரோ  சொத்து சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூலம்- 20min

Related Articles

Latest Articles