7.1 C
New York
Monday, December 29, 2025

முன் கண்ணாடியில் விரிசல்- அவசரமாக தரையிறங்கிய சுவிஸ் விமானம்.

சூரிச்சிலிருந்து கோதன்பர்க் (Gothenburg) நோக்கிச் சென்று கொண்டிருந்த சுவிஸ் விமானத்தின் முன்புற கண்ணாடியில்  விரிசல் ஏற்பட்டதால் ஹனோவரில்  அவசரமாகத் தரையிறக்கப்பட்டது.

விமானத்தின் முன்புறக் கண்ணாடியின் வெளிப்புற அடுக்கின் சில பகுதிகளில் விரிசல் ஏற்பட்டதை அடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஹனோவரில் அவசரமாக தரையிறங்க விமானிகள் முடிவு செய்தனர் என்று சுவிஸ் விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.

அந்த விமானத்தில் 123 பயணிகள் மற்றும் 5 பணியாளர்கள் இருந்தனர் என்றும், பயணிகளுக்கோ, பணியாளர்களுக்கோ எந்த ஆபத்தும் ஏற்படவில்லை என்றும் சுவிஸ் விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.

விமானம் சூரிச்சிலிருந்து 30 நிமிடங்கள் தாமதமாகவே புறப்பட்டது என்றும், ​​தொழில்நுட்பக் கோளாறு காரணமாக விமானத்தை அவசரமாக தரையிறக்க முயற்சிப்பதாக பயணிகளுக்குத் தெரிவிக்கப்பட்டது என்றும், 20 நிமிடங்களுக்குப் பிறகு, விமானம் ஹனோவரில் தரையிறங்கியது என்றும் சுவிஸ் விமானத்தில் பயணம் செய்த பெண் பயணி ஒருவர் தெரிவித்துள்ளார்.

விமானிகள், நிலைமையை எளிதாகக் கையாண்டனர் என்று அந்தப் பெண் பாராட்டினார்.

மூலம் – Zueritoday

Related Articles

Latest Articles