-0.9 C
New York
Saturday, February 14, 2026

நள்ளிரவில் வெடிப்பு- அடுக்குமாடி வீட்டில் சடலம் மீட்பு.

Solothurn கன்டோனில் உள்ள Rüttenen இல் இன்று அதிகாலை வெடிப்புச் சம்பவம் இடம்பெற்ற அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து ஒருவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அந்த நபரின் அடையாளம் மற்றும் வெடிப்பு மற்றும்  அதையடுத்த  தீ விபத்துக்கான காரணம் இன்னமும் தெரியவில்லை.

இன்று அதிகாலை 12:45 மணியளவில் இந்த  வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றதாக Solothurn  கன்டோனல் பொலிசார் தெரிவித்தனர்.

அவசர சேவைகள் பிரிவு விரைந்த போது, ​​இரண்டு மாடிகளைக் கொண்ட அடுக்குமாடி கட்டிடத்தின் முதல் மாடி ஏற்கனவே தீயில் முற்றாக தீ பரவியிருந்தது.

குடியிருப்பைச் சுற்றி சிதைவுகள் காணப்பட்டன. வெடிப்பு இடம்பெற்ற வீட்டில் இருந்து ஒருவரின் சடலம் மீட்கப்பட்டு தடயவியல் விசாரணைகள் தொடங்கப்பட்டுள்ளன.

வெடிப்பு நடந்த வீட்டில் உள்ள சில அடுக்குமாடி குடியிருப்புகள் இப்போது வாழத் தகுதியற்றவை என்பதால், பாதிக்கப்பட்டவர்களுக்கு தகுந்த தங்குமிட வசதிகளை ஏற்படுத்த நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது.

வெடிப்பு மற்றும் தீ பற்றிய தகவலை வழங்கக்கூடிய எவரும், கன்டோனல் பொலிசாரிடம் தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

மூலம் – Bluewin

Related Articles

Latest Articles