-0.2 C
New York
Tuesday, December 30, 2025

பிரேக் என அக்சிலரேட்டரை அமுக்கியதால் கட்டடத்துக்குள் புகுந்த கார்.

பிரேக் என அக்சிலரேட்டரை அமுக்கியதால் நேற்றும் ஒரு விபத்து இடம்பெற்றுள்ளது.

வெள்ளிக்கிழமை காலை, 9:30 மணியளவில், Baar இல் உள்ள Lindenstrasse இல் இந்த விபத்து ஏற்பட்டது.

41 வயதுடைய பெண் ஒருவரே,  தனது காரை நிறுத்துவதற்காக  பிரேக்கை அழுத்துவதாக நினைத்து, அக்சிலரேட்டரை அமுக்கினார்.

இதனால் அந்த வாகனம் ஒரு கட்டடத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. எனினும் அதன் சாரதி காயமடையவில்லை.

கார் முழுவதுமாக கட்டடத்துக்குள் புகுந்து,  கணிசமான சேதங்களை ஏற்படுத்தியுள்ளது.

மூலம்- 20min

Related Articles

Latest Articles