பேர்ன் ரயில் நிலையத்தில் நேற்று அதிகாலை ஒருவர் கூரிய பொருளால் தாக்கப்பட்டு காயமடைந்தார்.
நேற்று அதிகாலை 1.50 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றதாக பேர்ன் கன்டோனல் பொலிசார் தெரிவித்தனர்.
ஒருவர், கூரிய ஆயுதம் ஒன்றினால் இன்னொருவரைத் தாக்கினார் என்றும், இதில் அந்த நபர் பலத்த காயம் அடைந்தார் என்றும் அவர்கள் கூறினர்.
காயங்களுக்குள்ளானவர், ரயில் நிலையத்தில் அமர்ந்திருந்த போது மற்றவர் இந்த தாக்குதலை நடத்தி விட்டு தப்பியோடியுள்ளார்.
காயமடைந்தவர் ஹெலிகொப்டர் அம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
மூலம்- 20min

