Dübendorf இல் நான்கு மாடி கட்டடத்தில் ஏற்பட்ட தீவிபத்தில், 60 வயது முதியவர் பலத்த காயமடைந்தார்.
அவரது 53 வயது மனைவி புகையை சுவாசித்ததால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
நேற்றுக் காலை 10:30 மணியளவில், அடுக்குமாடி குடியிருப்பின் ஜன்னல்களில் இருந்து புகை வெளியேறியதாக குடியிருப்பாளர்கள் தெரிவித்தனர்.
அவசர சேவை பிரிவினர் சென்றபோது, அங்கிருந்த 12 குடியிருப்பாளர்களும் ஏற்கனவே கட்டடத்தை விட்டு வெளியேறிவிட்டனர்.
தீயணைப்பு துறையினர் விரைந்து செயற்பட்டதால், மற்ற குடியிருப்புகளுக்கு தீ பரவாமல் தடுக்கப்பட்டது.
தற்போதைக்கு அந்த அடுக்குமாடிக் குடியிருப்பில் வசிக்க முடியாத நிலை உள்ளதால், மாற்று இடம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தீ விபத்துக்கான காரணம் இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.
சூரிச் கன்டோனல் பொலிஸ் தீயணைப்பு புலனாய்வுப் பிரிவினரால் விசாரணை நடத்தப்படுகிறது.
இந்த தீவிபத்தினால் ஒரு இலட்சம் பிராங்குகளுக்கு மேல் சேதம் ஏற்பட்டுள்ளதாக பொலிஸ் மதிப்பிட்டுள்ளது.

