0.8 C
New York
Monday, December 29, 2025

109 பேருடன் சுவிஸ் விமானம் அவசரமாக தரையிறக்கம்.

சூரிச்சில் இருந்து வியன்னாவுக்குச் சென்ற LX1578 இலக்க  சுவிஸ் விமானம் நேற்று முனிச்சில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.

நேற்று மதியம் 12.30 மணியளவில், சுவிஸ் விமானம் LX1578 சூரிச் விமான நிலையத்திலிருந்து வியன்னாவிற்கு புறப்பட்டது.

விமானத்தில் 104 பயணிகள் மற்றும் ஐந்து பணியாளர்கள் இருந்தனர்.

திட்டமிடப்பட்ட நேரத்திற்குப் பின்னர், அந்த விமானம் பவேரிய தலைநகரான முனிச்சில் அவசரமாக தரையிறங்கியது.

விமானத்தின் முன்பகுதியில் இருந்து அசாதாரணமான துர்நாற்றம் வீசியதை அடுத்தே பாதுகாப்புக் கருதி விமானிகள் முனிச்சில் தரையிறக்கினர்.

அதையடுத்து துணை மருத்துவர்கள் பயணிகளை பரிசோதித்தனர். விமானமும் தொழில்நுட்ப சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.

பயணிகளுக்கு மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மூலம்- 20min

Related Articles

Latest Articles