சென்னையில் இருந்து யாழ்ப்பாணத்துக்கான சேவையில் ஈடுபடும் அலையன்ஸ் எயர் நிறுவனம் நேற்று தனது 500 ஆவது சேவையை நிறைவு செய்துள்ளது.
இதனை முன்னிட்டு யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில், விமானிகள், விமான பணியாளர்கள், விமான நிலைய மற்றும் விமான நிறுவன அதிகாரிகள் இணைந்து கேக் வெட்டி கொண்டாடினர்.
பலாலி- சென்னை இடையிலான இந்த விமான சேவை கோவிட் தொற்றுக்குப் பின்னர் 2022 டிசெம்பர் 12ஆம் திகதி மீளத் தொடங்கப்பட்டது.
தற்போது நாளாந்தம் இந்த சேவை இடம்பெற்று வருவதுடன், 2024ஆம் ஆண்டு இதுவரை 50 ஆயிரம் வரையான பயணிகளை வடக்கு நுழைவாயில் ஊடாக கையாண்டுள்ளது.
அதேவேளை, யாழ்ப்பாணம்- சென்னை இடையே இன்டிகோ எயர் விமான நிறுவனம், செப்ரெம்பர் 1ஆம் திகதி முதல் பதிய விமான சேவையை ஆரம்பிக்கவுள்ளதாக அறிவித்துள்ளது.

