ஜெர்மன் உரிமத் தகடு கொண்ட கார் ஒன்றை, சாரதி பாதுகாப்பற்ற முறையில் ஓட்டிச் சென்றதால், நேற்றுக் காலை சூரிச் கன்டோனல் பொலிசார் தடுத்து நிறுத்திச் சோதனை செய்தபோது, அந்த காரில் பெருமளவு போதைப்பொருள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
A3 நெடுஞ்சாலையில், சூரிச் நோக்கி அந்தக் கார் பயணம் செய்து கொண்டிருந்ததாக பொலிசார் தெரிவித்தனர்.
சோதனையின் போது, போதைப்பொருள் மோப்ப நாய் காரில், மறைத்து வைக்கப்பட்டிருந்த போதைப் பொருளை அடையாளம் காட்டியது.
இதையடுத்து காரின் உட்புறத்தை அகற்றிய போது, பத்து கிலோகிராம் கொகெய் போதைப் பொருள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
ஜேர்மனியில் வசிக்கும் அல்பேனியரான 52 வயதுடைய சாரதி, கைது செய்யப்பட்டுள்ளார்.
மூலம் – Zueritoday

