Basel இல் உள்ள SRK இரத்த தான மையம் அவசரமாக குருதிக் கொடை செய்யுமாறு அழைப்பு விடுத்துள்ளது.
குருதி கையிருப்பு குறைவாகவே உள்ளதாகவும், மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு அவசரமாக இரத்தம் தேவைப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Basel பிராந்தியத்தில் இரத்த இருப்பு அளவு கவலையளிக்கும் அளவுக்கு குறைந்துள்ளது.
இதனால், ஆரோக்கியமான அனைவரும் இரத்த தானம் செய்ய வேண்டும்.
50 கிலோவுக்கும் அதிக எடை கொண்ட, 18 முதல் 60 வயதுக்குட்பட்ட ஆரோக்கியமான அனைத்து மக்களும் குருதிக் கொடை வழங்க முடியும் என்றும், SRK இரத்த தான மையம் அறிவித்துள்ளது.
மூலம் – 20min.

