Fribourg கன்டோனில், உள்ள Granges-Paccot இல் பொலிஸ் வாகனம் மோதிய விபத்தில் இரண்டு பேர் காயமடைந்தனர்.
பொலிஸ் வாகனம் சைரன் ஒலித்தபடி, நீல விளக்குகளை ஒளிரச் செய்து கொண்டு அவசர பயணத்தில் ஈடுபட்டிருந்த போது இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
நேற்றுக் காலை 10:05 மணியளவில், ரூட் டெஸ் க்ரைவ்ஸ் சந்தியில் உள்ள ரவுண்டானாவில், இந்த விபத்து ஏற்பட்டது.
அவசர தேவைக்கு சென்று கொண்டிருந்த பொலிஸ் காரும், மற்றொரு வாகனமும் இந்த விபத்தில் சிக்கியது.
இதில், இரண்டாவது வாகனத்தின் சாரதியான 52 வயதுடையவரும், ஒரு பொலிஸ் அதிகாரியும் காயம் அடைந்தனர்.
மூலம் – 20min.

