கனடாவைச் சேர்ந்த ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் அதிகாரியும், இப்போது வட கொரியா நிபுணராக பணிபுரிபவருமான ஒருவர், சீனாவுக்காக உளவு பார்த்த குற்றச்சாட்டின் பேரில் சுவிட்சர்லாந்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
பெயர் வெளியிடாத புலனாய்வுத்துறை வட்டாரங்களை மேற்கோள் காட்டி ஊடகங்கள் இந்த தகவலை வெளியிட்டுள்ளன.
சுவிஸ் சட்டமா அதிபர் அலுவலகம் இது தொடர்பான கேள்விகளுக்கு உடனடியாக பதிலளிக்கவில்லை.
உளவு பார்த்த குற்றச்சாட்டில் சந்தேக நபர் கைது செய்யப்படுவதற்கு முன்னர், சுற்றுச்சூழல் ஆலோசகராக தனது பணிக்காக தொடர்ந்து சீனாவுக்குப் பயணங்களை மேற்கொண்டிருந்தார் என ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அந்த அதிகாரியின் முழுப் பெயரையும் ஊடகங்கள் வெளியிடவில்லை.
அவர் இதுவரை குற்றவாளி என்று அறிவிக்கப்படவில்லை என்பதுடன், அதிகாரிகள் அவருக்கு எதிராக பகிரங்க குற்றச்சாட்டுகளை முன்வைக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
50 வயதுடைய, ஜெனிவாவில் வசிக்கும் அந்த நிபுணர், சுவிஸ் சட்டமா அதிபர் அலுவலகத்தின் விசாரணை முடிவடையும் வரை பல மாதங்களாக விசாரணைக் காவலில் வைக்கப்பட்டுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மூலம் – Swissinfo

