சுவிஸ் ஏரிகளில் கிடக்கும் ஆயிரக்கணக்கான தொன் வெடிபொருட்களை பாதுகாப்பாக மீட்பதற்கான முறைகளை கண்டறிய போட்டி ஒன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சுவிஸ் ஏரிகளில் ஆயிரக்கணக்கான தொன் வெடிபொருட்கள் கிடக்கின்றன. அவற்றை எப்படி மீட்பது என்று சுவிஸ் மத்திய அரசுக்கு தெரியவில்லை.
அதனால் வெடிபொருட்களை அகற்றும் யோசனை தொடர்பான போட்டியை நடத்துகிறது.
நியூசெட்டல் ஏரியில் 4,500 தொன்களும், துன் ஏரியில் 4,600 தொன்களும், லூசெர்ன் ஏரியில் 3,300 தொன் களும், பிரைன்ஸ் ஏரியில் 280 தொன்களும் வெடிபொருட்கள், உள்ளன.
அவை இராணுவத்தால் ஏரிகளில் கைவிடப்பட்டவை அல்லது பயிற்சியின் போது ஏரிகளின் மீது போர் விமானங்கள் மூலம் வீசப்பட்டவை ஆகும்.
ஏரிகளில் இருந்து இந்த வெடிபொருட்களை அகற்றுவதற்கான வழிமுறை இன்னும் கண்டறியப்படாத நிலையில், பாதுகாப்பான மீட்பு நடைமுறைக்கான யோசனையை முன்வைப்பவருக்கு 50,000 பிராங்குகள் பரிசாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சில வெடிபொருட்கள் 150 மீட்டர் அல்லது அதற்கும் அதிகமான ஆழத்தில் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மூலம்- 20min

