ஜேர்மன் எல்லைக்கு அருகில் இருக்கும் சுவிட்சர்லாந்தின் Beznau அணுமின் நிலையம் மீண்டும் செயற்படத் தொடங்கியுள்ளது.
இந்த அணுமின் நிலையம் கடந்த திங்கட்கிழமை பிற்பகல் 2.10 மணியளவில் திடீரென செயலிழந்தது.
எனினும், தற்போது, இதன் 1 ஆவது பிரிவு மீண்டும் செயற்படுத்தப்பட்டுள்ளது.
செயலிழப்புக்கு காரணமான தவறு நிபுணர்களால் திருத்தப்பட்டுள்ளதாக Axpo நிறுவனம் அறிவித்துள்ளது.
Beznau உலகின் மிகப் பழமையான அணுமின் நிலையமாகும்.