சுவிட்சர்லாந்திலுள்ள பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் பாடசாலைக்குச் செல்லும் பயணம் குறித்து கவலையடைந்துள்ளனர்.
அவர்கள் குறிப்பாக, போக்குவரத்து விபத்துக்கள், கடத்தல்கள் அல்லது பிற குழந்தைகளால் கொடுமைப்படுத்துதல் பற்றிய கவலைகளுக்கு உள்ளாகியிருப்பதாக தெரியவந்துள்ளது.
பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் பாடசாலைப் பயணத்தைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பது குறித்து ஜெனரல் இன்சூரன்ஸ் நடத்திய ஒரு ஆய்வில் இது தெரியவந்துள்ளது.
4 முதல் 11 வயது வரையான குழந்தைகளைக் கொண்ட பெற்றோர் 521 பேர் இந்த ஆய்வில் பங்கேற்றனர்.
இதன்படி 84 சதவீத பெற்றோர், போக்குவரத்து விபத்துக்களைப் பற்றி கவலைப்படுகிறார்கள்.
அதே நேரத்தில் 62 சதவீதம் பேர் தாக்குதல்கள் மற்றும் கடத்தல்களுக்கு பயப்படுகிறார்கள்.
25 சதவீதம் பேர் பள்ளி மாணவர்களிடையே கொடுமைப்படுத்துதல் குறித்து கவலை கொண்டுள்ளனர்.
58 சதவீதம் பெற்றோர் தெருக்களைக் கடப்பது – குறிப்பாக பெரிய நகரங்களில் நெரிசலான வீதிகளில், மிகவும் ஆபத்தானதாகக் கருதுகின்றனர்.
மூலம் – 20min