18 C
New York
Friday, September 12, 2025

பாலியல் குற்றச்சாட்டுகள்- பாதிரியார் இடைநிறுத்தம்.

Ticino வில் பல்வேறு பாலியல் குற்றங்களில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்ட பாதிரியார்,  இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

குழந்தைகளுடன் பாலியல் செயல்கள், பாலியல் வற்புறுத்தல், எதிர்ப்புத் திறன் இல்லாத நபர்களுடன் பாலியல் செயல்கள் மற்றும் ஆபாசப் படங்களை எடுத்தது போன்ற குற்றங்களில் ஈடுபட்டதாக அவர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

அந்த பாதிரியார் வெளிநாட்டினரை ஒருங்கிணைப்பதற்கான கன்டோனல் ஆணைக்குழுவில் வகித்த பதவியிலிருந்தும், ஆசிரியராக பணிபுரிவதிலிருந்தும் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார் என்று டிசினோ அரசாங்கத்தின் தகவல் தொடர்பு அதிகாரி தெரிவித்துள்ளார்.

அந்த நபர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

குற்றவியல் நடவடிக்கைகளின் முதல் முடிவுகள் கிடைக்கும் வரை அவர் இடைநிறுத்தப்பட்டுள்ளார்.

மூலம் -Zueritoday

Related Articles

Latest Articles