Altenrhein இல் உள்ள Wiesenstrasse இல் நேற்று பிற்பகல் வீடு ஒன்றில் உயிரிழந்த இரண்டு பேரின் சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
48 வயதுடைய ஆணும் 41 வயதுடைய பெண்ணுமே சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.
அந்த வீட்டில் குடும்ப வன்முறை குற்றம் நடந்ததாக சந்தேகிக்கப்படுகிறது.
உயிரிழந்தவர்கள் ஒரே குடும்ப பதிவைக் கொண்டவர்கள் என்றும், அவர்களின் மரணத்துக்கான காரணம் குறித்து விசாரித்து வருவதாகவும் பொலிசார் தெரிவித்தனர்.
மூலம் -Zueritoday