இலங்கையில் எதிர்வரும் செப்ரெம்பர் 21ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் 39 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு 40 பேர் கட்டுப்பணம் செலுத்தியிருந்தனர்.
எனினும், சரத் குணவர்த்தன என்ற சுயேட்சை வேட்பாளர் வேட்புமனுவைத் தாக்கல் செய்யவில்லை.
ஏனைய 39 பேரும் நேற்று தேர்தல் ஆணைக்குழுவில் வேட்புமனுக்களை சமர்ப்பித்தனர்.
இதையடுத்து, அந்த வேட்புமனுக்கள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு,அனைத்தும் ஏற்றுக் கொள்ளப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
இலங்கையின் ஜனாதிபதி தேர்தல் வரலாற்றில் அதிகபட்ச வேட்பாளர்கள் போட்டியிடும் தேர்தலாக இது அமைந்துள்ளது.