ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் தமிழ் பொது வேட்பாளர் பா.அரியநேத்திரனுக்கு சங்கு சின்னம் வழங்கப்பட்டுள்ளது.
தேர்தல்கள் ஆணைக்குழு இதனை அறிவித்துள்ளது.
நேற்று வேட்பு மனுத் தாக்கல் செய்யப்பட்ட பின்னர், சுயேட்சை வேட்பாளர்களுக்கான சின்னங்கள் ஒதுக்கப்பட்டன.
இதற்கமைய தமிழ் பொது வேட்பாளராக போட்டியிடும் அரியநேத்திரனுக்கு சங்கு சின்னமும், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு எரிவாயு சிலிண்டர் சின்னமும், சரத் பொன்சேகாவுக்கு லாந்தர் சின்னமும் வழங்கப்பட்டுள்ளன.