16.1 C
New York
Friday, September 12, 2025

செல்வத்தில் கொழிக்கும் சமூக ஜனநாயகக் கட்சி.

9 மில்லியன் சுவிஸ் பிராங்கிற்கும் அதிகமான மொத்த வருமானத்துடன், சமூக ஜனநாயகக் கட்சியினர் 2023 ஆம் ஆண்டில்,  அதிகளவு நிதியைக் கொண்டிருந்தனர்.

இரண்டாவது இடத்தில் உள்ள சுவிஸ் மக்கள் கட்சியை விட இதனிடம் உள்ள நிதி  மூன்றில் ஒரு பங்கு அதிகமாகும்.

கடும்போக்காளர்களிடம் உள்ளதை  இரண்டு மடங்கு அதிக நிதியை , சமூக ஜனநாயகக் கட்சி வைத்திருந்தது.

2023 ஆம் ஆண்டில் கட்சி நிதியுதவி குறித்த மூன்றாவது அறிக்கை இன்று சுவிஸ் பெடரல் தணிக்கை அலுவலகத்தால் வெளியிடப்பட்டது.

அந்த அறிக்கையின்படி, சுவிஸ் மக்கள் கட்சி மொத்தம் சுமார் 5.89 மில்லியன் சுவிஸ் பிராங் நிதியுதவியை கடந்த ஆண்டு  பெற்றிருக்கிறது.

மூன்றாவது இடத்தில் உள்ள கடும்போக்காளர்கள்  4.2 மில்லியன் சுவிஸ் பிராங் நிதியைப்  பெற்றனர்.

பெரிய கட்சிகளின் தரவரிசையில்  கடைசியில், மையவாதிகள் உள்ளனர், அதைத் தொடர்ந்து பசுமைவாதிகள் மற்றும் பசுமை தாராளவாதக் கட்சிகள் உள்ளன.

மூலம் – Swissinfo

Related Articles

Latest Articles