18 C
New York
Friday, September 12, 2025

செவ்வாய் முதல் ஏ13 வீதி முழுமையாக திறப்பு.

Lostallo – Mesocco GR இடையேயான ஏ13 நெடுஞ்சாலை செவ்வாய்க்கிழமை காலை முதல் போக்குவரத்துக்கு முழுமையாக திறக்கப்படும்.

பெரும்பாலான சீரமைப்புப் பணிகள் முடிவடைந்துள்ளதாக மத்திய வீதிகள் அலுவலகம் அறிவித்துள்ளது.

செப்ரெம்பர் 3 ஆம் திகதி முதல் இந்த பகுதி இரண்டு வழிப் போக்குவரத்துக்கு மீண்டும் திறக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஜூன் 21ஆம் திகதி இப்பகுதியில் ஏற்பட்ட கடுமையான புயல்களைத் தொடர்ந்து, நெடுஞ்சாலை பகுதி இரண்டு வாரங்களுக்கு மூடப்பட்டது.

விரைவான புனரமைப்புப் பணிகளுக்குப் பின்னர்,  ஜூலை 5 ஆம் திகதி முதல் ஒவ்வொரு திசையிலும் ஒரு பாதை மட்டும் திறக்கப்பட்டது.

மூலம்- Bluewin

Related Articles

Latest Articles