சுவிஸ் பெடரல் ரயில்வே போக்குவரத்து பொலிஸ் அதிகாரிகள், சுவிட்சர்லாந்தில் உள்ள நிலையங்கள் மற்றும் ரயில்களில் நேற்று முதல், உடலில் கண்காணிப்பு கமெரா பொருத்திக் கொண்டு ரோந்துப் பணியில் ஈடுபடுகிறார்கள்.
ஒவ்வொரு ரோந்து அணியிலும், குறைந்தது ஒரு அதிகாரியின் உடலில் வீடியோ கமெரா பொருத்தப்பட்டிருக்கும்.
இநத கமெராக்கள், அகன்ற கோணத்தில் வீடியோ படங்களையும்,ஒலியையும் பதிவு செய்யும்.
ஆனால் தொடர்ச்சியாக அது பதிவு செய்யாது. போக்குவரத்து பொலிஸ் அதிகாரிகள் தேவைப்படும் போது கமெராவை வாய்மொழி உத்தரவின் மூலம் இயங்கச் செய்ய முடியும்.
கமெரா செயற்படுத்தப்படும் போது, மூன்று முன் விளக்குகள் சிவப்பு நிறத்தில் ஒளிருவதுடன், ஒரு சமிக்ஞை ஒலியையும் எழுப்பும்.
மூலம்- Swissinfo