சுவிசில் நேற்று மாலை சூறைக்காற்று இடிமின்னலுடன் பெய்த கன மழையினால் பல இடங்களில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.
சூறைக்காற்று, இடிமின்னலுடன், பெய்த கடும் மழையின் போது, பல இடங்களில் கோல்ப் பந்து அளவில் ஆலங்கட்டிகள் விழுந்தன.
சூரிச், பேர்ன், பாசல் உள்ளிட்ட கன்டோன்களில் இந்த மோசமான காலநிலையினால் பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டன.
ரயில் நிலையங்கள் பல இருளில் மூழ்கியுள்ளன. சில இடங்களில் மின்சாரம் தடைப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வீதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மூலம் – 20min