19.4 C
New York
Sunday, May 17, 2026

ஓகஸ்ட் மாத பணவீக்கம் குறைந்தது.

சுவிட்சர்லாந்தில் ஆண்டு பணவீக்கம் ஓகஸ்ட் மாதம் குறைந்துள்ளது.

ஆனால், கடந்த மாதத்துடன் ஒப்பிடும்போது விலைகள் நிலையாகவே இருந்தது.

குறிப்பாக, ஜூலை மாதத்தில் 1.3 சதவீதமாக இருந்த பணவீக்கம், ஓகஸ்ட் மாதத்தில் 1.1 சதவீதமாக குறைந்துள்ளது என மத்திய புள்ளியியல் அலுவலகம் அறிவித்தது.

அதேவேளை,  நுகர்வுப்பொருட்களின் விலை முந்தைய ஆண்டின் இதே மாதத்தை விட சராசரியாக 1.1 சதவீதம் அதிகமாக இருந்தது.

உள்நாட்டுப் பொருட்கள் ஒரு வருடத்திற்கு முன்பு இருந்ததை விட (+2.0%) ஒப்பீட்டளவில் அதிக விலையில் விற்கின்றன.

அதே நேரத்தில் இறக்குமதி செய்யப்பட்ட பொருட்கள் (-1.9%) இன்னும் மலிவானவையாக உள்ளன.

ஆண்டின் தொடக்கத்தில் இருந்து, இங்கு பணவீக்கம் 1.0 முதல் 1.4 சதவீதம் வரை ஏற்ற இறக்கமாக உள்ளது.

அதற்கு முன், 2022 ஓகஸ்டில் பணவீக்கம் அதிகபட்சமாக 3.5 சதவீதமாக உயர்ந்திருந்தது.

மூலம்- zueritoday

Related Articles

Latest Articles