21.6 C
New York
Wednesday, September 10, 2025

கட்டுமானத் தளத்தில் திருடப்பட்ட வெடிபொருட்கள்.

Basel கன்டோனில்  Laufental இல் உள்ள SBB கட்டுமான தளத்தில் இருந்து அடையாளம் தெரியாத நபர்களால் கிலோ கணக்கிலான வெடிபொருட்களை திருடப்பட்டுள்ளன.

இதையடுத்து பெடரல் சட்டமாஅதிபர் அலுவலகம் குற்றவியல் விசாரணை நடவடிக்கைகளைத் ஆரம்பித்துள்ளது.

இந்த சம்பவம் ஜூலை மாதம் நடந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வீதி அமைப்பு பணியில் ஈடுபட்டுள்ளவர்கள் பாறைகளை அகற்றுவதற்காக பயன்படுத்தும் வெடிபொருட்களே திருடப்பட்டுள்ளன.

இந்தச் சம்பவம் தொடர்பாக எவரும் தடுத்து வைக்கப்படவில்லை என்ற போதும் மேலதிக விபரங்களை பொலிசார் வழங்கவில்லை.

மூலம்- zueritoday

Related Articles

Latest Articles