2 C
New York
Monday, December 29, 2025

மேயராக விரும்புகிறார் ராஜா.

Burgdorf  ராஜா  என்று  தன்னைத் தானே  அறிவித்துக் கொண்ட Jonas Lauwiner , என்பவர், Burgdorf  நகர மேயராக வேண்டும் என விரும்புகிறார்.

நவம்பர் 24ஆம் திகதி நடைபெறும் நகராட்சித் தேர்தலில், அவர் மேயர் பதவிக்கும், நகரசபை உறுப்பினர் பதவிக்கும் போட்டியிடவுள்ளார்.

மேயராக தேர்ந்தெடுக்கப்படுவதற்கான வாய்ப்புகள் குறைவாக இருப்பதாகவே அவர் மதிப்பிடுகிறார்.

தற்போதைய மேயர், ஸ்டீபன் பெர்கர், நிச்சயமாக ஒரு வலுவான எதிர்ப்பாளர். ஆனால் Burgdorf  மக்கள் என்னை விரும்பினால், நான் அவர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தி, அவர்களுக்காக நிற்பதில் மகிழ்ச்சி அடைவேன் என்று 29 வயதான அவர் கூறினார்.

தாம் தேர்ந்தெடுக்கப்பட்டால், தனது சம்பளத்தில் 50 சதவீதத்தை நகராட்சிக்கும் மக்களுக்கும் கொடுக்கப் போவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மூலம் – 20min.

Related Articles

Latest Articles